சார் ப்ளீஸ் சார்… எங்களுக்காக ஒரே ஒரு… அனிருத்திடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்..!
அனிருத்திடம் நடிக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் கெஞ்சியுள்ளார்
சென்னை: அனிருத் நிச்சயம் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தளபதி திரைப்படத்தின் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாடலில் வரும்.. '' உள்ள மட்டும் நானே... உசுரக்கூடத் தானே... என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்... என்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்கும் மிகச்சரியாக பொருந்தும். அந்த அளவிற்கு நட்பின் இலக்கணமாக இருவரும் இருக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா இசைவெளியீட்டு விழா இருந்ததால், கோலமாவு கோகிலா திரைப்பட திட்டம் போடத் தெரியல புரமோ பாடலை லேட்டாக வெளியிட்டார் அனிருத். இவை இரண்டுமே யூட்யூபில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது..
திட்டம்போட தெரியல புரமோ வீடியோ பாடலில் அனிருத் தோற்றத்தில் ஒரு பொலிவு தெரிகிறது. அவ்வப்போது பாடலுக்கு நடனம் ஆடிய அனிருத், இந்த பாடலில் சில முகபாவனைகளோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.
இந்த பாடலைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்.. சார் ப்ளீஸ் சார்... எங்களுக்காக சீக்கிரமா ஒரு படம் பண்ணுங்க சார். இந்த வீடியோவில் ரொம்ப நல்லா இருக்கீங்க அடுத்ததுக்காக நான் காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு விக்னேஷ் சிவனையும் பாராட்டியுள்ளார்.
இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா யோகிபாபு நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











