செம ரகளையான ஸ்டூடண்ட்.... டான் படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்பு

சென்னை : அயலான் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட டான் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது.

இந்த படத்தில் இன்ஜினீயரிங் மாணவராக நடித்து வருகிறார் சிவா. இதற்காக தன்னுடைய நீண்டநாள் தாடியை எடுத்து ஸ்மார்ட்டாகியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்தையடுத்து அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

பங்கேற்ற சிவகார்த்திகேயன்

பங்கேற்ற சிவகார்த்திகேயன்

தற்போது அடுத்ததாக டான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இயக்குநர் அட்லியின் தெறி மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் டான் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இன்ஜினீயரிங் மாணவராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

ஸ்மார்ட்டான சிவா

ஸ்மார்ட்டான சிவா

இதற்கென சில மாதங்களாக நீண்ட தாடியுடன் காணப்பட்ட அவர் அதை மழித்துவிட்டு கிளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட்டாகியுள்ளார். இந்த படத்தில் அவர் ரகளையான மாணவராக வருவதால் படத்திற்கு டான் என்று பெயரிடப்பட்டுள்ளதாக இயக்குநர் சிபி தெரிவித்துள்ளார்.

சிறப்பான காமெடி படம்

சிறப்பான காமெடி படம்

ஆனால் அவர் கத்தி தூக்கும் மாணவரில்லை என்றும் மற்றவர்களை சிரிக்க வைக்கும் மாணவர் என்றும் சிபி மேலும் தெரிவித்துள்ளார். இந்த படம் சிறப்பான காமெடி படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் துவங்கியுள்ள படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார்.

7வது முறை இணைந்த அனிருத்

7வது முறை இணைந்த அனிருத்

சென்னையில் நடைபெறும் சூட்டிங்கை தொடர்ந்து அடுத்தகட்ட சூட்டிங் எங்கு நடைபெறும் என்பது குறித்து அப்டேட் வெளியிடப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த படததில் 7வது முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X