அனிருத்துக்கும், எனக்கும் மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது: ரகசியம் சொன்ன சிவகார்த்திகேயன்

By Siva

Recommended Video

அனிருத்துக்கும் எனக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்டரி இது தான் - சிவா ஓபன் டாக்- வீடியோ

கொச்சின்: அனிருத், சிவகார்த்திகேயன் காம்போ எப்படி வெற்றிகரமாக உள்ளது என்ற ரகசியத்தை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கேரளாவில் நடைபெற்றது.

அந்த சந்திப்பின்போது சிவகார்த்திகேயன் கூறியதாவது,

கஷ்டம்

கஷ்டம்

ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால் ஃபஹத் ஃபாசிலுக்கு அப்படி இல்லை. படத்தில் 8, 9 பக்க வசனங்கள் எல்லாம் இருந்தது. அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. தமிழில் ஃபஹதை பார்க்காதவர்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

நடிப்பு

நடிப்பு

ஃபஹதோடு நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்பது தான் எனக்கு இருந்த சவாலே. ஃபஹத் எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நடக்கும்.

விருப்பு

விருப்பு

ரசிகர்களை யூஸ் பண்ணிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர் மன்றம் தேவை தான். நேரம் கிடைக்கும்போது அவர்களை சந்தித்து வருகிறேன். அவர்களால் என்ன பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று கண்டுபிடிப்பது எளிது.

டாப் ஸ்டார்

டாப் ஸ்டார்

நயன்தாரா தென்னிந்தியாவில் ஒரு டாப் ஸ்டார். அவரின் அர்ப்பணிப்பு, சின்சியாரிட்டியால் தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமேல் பெண்கள் நடிக்க வரும்போது நயன்தாராவை ரோல்மாடலாக வைத்து தான் வருவார்கள்.நயன்தாராவுடன் நடித்ததில் மகிழ்ச்சி.

ஆசை

ஆசை

மலையாள படத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் இயக்குனர்கள் என்னை வைத்து படம் எடுப்பார்களா என தெரியவில்லை. எனக்கு மலையாளம் சரியாகத் தெரியாது.

வித்தியாசம்

வித்தியாசம்

நான் நடித்த படங்களிலேயே வேலைக்காரன் வித்தியாசமான படம். வேலைக்காரர்களை பற்றிய படம் இது. மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், ப்ரித்விராஜ், நிவின், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் எனக்கு பிடித்த மலையாள நடிகர்கள். ஃபஹத் போன்று நான் வேறு எந்த சக நடிகருடனும் இவ்வளவு சிரித்துப் பேசி வாழ்க்கை பற்றி பேசியது இல்லை.

மோகன்ராஜா

மோகன்ராஜா

தனி ஒருவன் படம் பார்த்த உடன் மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தனி ஒருவன் மாதிரி படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. மோகன் ராஜாவின் கதையால் தான் நயன்தாரா, ஃபஹத் வேலைக்காரன் படத்தில் நடிக்க வந்தனர்.

இசை

இசை

நானும், அனிருத்தும் லவ்வர்ஸ் இல்ல, பிரதர்ஸ். என் படத்தில் அனிருத் பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம் கம்போசிங்கின்போது நான் அவருடன் இருக்க மாட்டேன். எந்த டிமான்டும் வைக்க மாட்டேன் என்றார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X