மகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்த சிவகார்த்திகேயன்... வைரலாகி ஃபோட்டோ
சென்னை : நடிகர், தயாரிப்பாளர் என பல வகைகளில் உயர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'ஹீரோ' படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு கொரோனாவால் இவரது படங்களின் ரிலீஸ், சூட்டிங் தாமதமாகின.
'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாருடன் 'அயலான்','கோலமாவு கோகிலா' இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் 'டாக்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தயாராகி வரும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சும்மா கிழி' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தான் சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் பஸ்சில் சென்றுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











