Sivakarthikeyan 21 - பரபரக்கும் சிவகார்த்திகேயன் 21 ஷூட்டிங்.. லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Sivakarthikeyan 21 (சிவகார்த்திகேயன் 21) சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஷ்வின் படத்தை இயக்கியிருப்பதால் படம் ஹிட்டாகும் எஸ்கேவின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸாகிறது. எனவே ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அதாவது ஜூலை ஆம் தேதி மாவீரன் ரிலீஸாகிறது.

கமல் தயாரிப்பில்ல் சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தை முடித்துவிட்டு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதற்காக சிவகார்த்திகேயன் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்துவருவதாகவும், இந்தப் படம் அவரது கரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று பேச்சு எழுந்தது.
ஓய்வு கொடுத்த சிவகார்த்திகேயன்: கமல் ஹாசன் தயாரிப்பில் முதல்முறையாக நடிப்பதால் தன் பக்கம் எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்பதில் கான்சியஸாக இருக்கிறார் சிவா. எனவேதான் ஜிம் ஒர்க் அவுட், சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு என பல செயல்களில் இறங்கியிருக்கிறாராம். இதற்கிடையே படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாள்கள் ஷூட்டிங்: எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில்தான் தொடங்கி நடக்கப்போகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி காஷ்மீரில் மொத்தம் 55 நாள்கள் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறதாம். படத்தின் முக்கியமான காட்சிகளை இந்த ஷெட்யூலில் ஷூட் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











