அயலான் டப்பிங் வேலைகள் தொடங்கியது... படக்குழு அறிவிப்பு!

சென்னை : சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பித்தது என படக்குழு அறிவித்துள்ளது.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்பொழுது டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டைம் ட்ராவல்

டைம் ட்ராவல்

வேலைக்காரன் படத்தை முடித்த கையோடு அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஒரு ஆண்டாக இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இன்று நேற்று நாளை என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ரவிகுமார் அயலான் படத்தையும் இயக்கியுள்ளார். முதல் படத்திலேயே டைம் ட்ராவல் என்ற வித்தியாசமான கான்செப்ட்டை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டு வந்து அனைவரையும் வியப்படையச் செய்தார்.

கிராபிக்ஸ் காட்சிகள்

கிராபிக்ஸ் காட்சிகள்

அயலான் திரைப்படம் சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகி வருகிறது என சொல்லப்பட்ட நிலையில் அதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

கருணாகரன் நடித்த காட்சிகளில்

கருணாகரன் நடித்த காட்சிகளில்

கருணாகரன், பாலசரவணன், பானுப்பிரியா,யோகி பாபு என பலர் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்பொழுது இதன் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட டப்பிங் வேலைகள் நடிகர் கருணாகரன் நடித்த காட்சிகளில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனும் கலந்துகொள்வார்

சிவகார்த்திகேயனும் கலந்துகொள்வார்

ரெமோ படத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவின் 24Am ஸ்டூடியோ நிறுவனம் , இந்தப் படத்தையும் தயாரித்து இருக்க டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ தகவலை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். டப்பிங் ஸ்டூடியோவில் கருணாகரன் டப்பிங் பேசியவாறு இருக்கும் புகைப்படம் மற்றும் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இப்பொழுது வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2021 இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X