விரைவில் அயலான் அப்டேட்... சிவகார்த்திகேயன் லைன்-அப்பில் இத்தனை படங்களா..?

சென்னை: சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அயலான் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் லைன்-அப்பும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாவீரன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல், மரண மாஸ்ஸாக உருவாகியுள்ளது. "சீன் ஆஹ்... சீன் ஆஹ்" எனத் தொடங்கும் இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

 விரைவில் அயலான் அப்டேட்

விரைவில் அயலான் அப்டேட்

இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் அவரது அயலான் திரைப்படமும் டிவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக விரைவில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் அயலான் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 சிவகார்த்திகேயன் லைன்-அப்

சிவகார்த்திகேயன் லைன்-அப்

சிவா நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அயலானும் ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

 வெங்கட் பிரபுவுடன் கூட்டணி

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது அவரது 24வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் எனக் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான முறையில் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 காத்திருக்கும் ஏஆர் முருகதாஸ்

காத்திருக்கும் ஏஆர் முருகதாஸ்

வெங்கட் பிரபுவின் படத்தை முடித்துவிட்டு அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித், அமீர்கான், சிரஞ்சீவி, சூர்யா என சூப்பர் ஸ்டார்களுடன் பயணித்த ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்தையும் இயக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு, ஏஆர் முருகதாஸ் இருவரும் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கூட்டணி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X