அயலான் ரிலீஸ் தேதி இதுதானா…? சிங்கிளாக களமிறங்க முடிவு செய்த சிவகார்த்திகேயன்…!

சென்னை: 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'அயலான்' எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்த அயலான் படக்குழு இப்போது புதிய முடிவு எடுத்துள்ளார்களாம்.

அதன்படி, சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகளை படக்குழு முடிவு செய்து வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அயலான்

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அயலான்

'இன்று நேற்று நாளை' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்தார். அதன்படி 2018ம் ஆண்டு 'அயலான்' திரைப்படம் தொடங்கப்பட்டது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். அதனால்; இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. அயலான் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினையால் ஷூட்டிங்கை தொடர முடியாமல் போனது.

அயலான் ரிலீஸ் தேதி

அயலான் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா அயலான் படத்தை தயாரித்து வந்தார். ஆனால், பட்ஜெட் பிரச்சினையில் அவர் பாதியிலேயே விலகிவிட, கேஜிஆர் நிறுவனம் அயலான் படத்தை கைப்பற்றியது. அதன்பின்னர் அயலான் ஷூட்டிங் வேகமாக நடைபெற்றாலும், கிராபிக்ஸ் பணிகள் மட்டும் தாமதமாகிக் கொண்டே போனது. இந்நிலையில், தற்போது அயலான் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 24 அல்லது 25ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சிங்கிளாக களமிறங்க முடிவு

சிங்கிளாக களமிறங்க முடிவு

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின்றன. அடுத்து பிப்ரவரி மாதம் தனுஷின் வாத்தி, சிம்புவின் பத்து தல படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரலில் ரஜினியின் ஜெயிலர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2, பொன்னியின் செல்வன் செகண்ட் பார்ட் உட்பட மேலும் சில படங்கள் வெளியாகலாம். அதனால், மார்ச் மாதம் அயலான் படத்தை தனியாக களமிறக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம்.

விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அயலான் தான் தமிழில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அயலான் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளையும் ஏஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டாராம். இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X