ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் அயலான்... ரசிகர்களின் கோரிக்கைக்கு பதில் கிடைக்குமா
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவரது படங்களின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து அவரது அயலான் படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான டாக்டர் படம் அவருக்கு வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்துள்ளது. அவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
சன் டிவியின் தயாரிப்பிலும் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது நடிப்பில் டான் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தையும் சிவா தயாரித்துள்ளார். படத்தில் கல்லூரி மாணவனாக அவர் நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் குஷி
டாக்டர் படம் ஏற்படுத்திய உற்சாகத்திலிருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்னதாகவே தற்போது டான் படமும் அவர்களிடையே மிகுந்த குஷியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த அயலான் படமும் தனது சூட்டிங்கை நிறைவு செய்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகுமா அயலான் டீசர்
ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக படத்தின் சிஜி பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக இன்றைய தினம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே கோரிக்கையை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

மூன்று ஆண்டு தயாரிப்பில் அயலான்
இன்று நேற்று நாளை வெற்றிப் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மூன்று வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படமும் இதுவாகும். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பயணம்
படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பாதையை துவங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து தொகுப்பாளராக உயர்ந்து. தற்போது திரைத்துறையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார். அவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

ட்ரெண்டிங்கில் அயலான்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அயலான் ட்ரெண்டிங்காகி உள்ளது போலவே சிவகார்த்திகேயன் பிறந்தநாள் மற்றும் எஸ்கே21 போன்றவையும் ட்ரெண்டிங்கில் உள்ளன. அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











