அயலான் படத்தோட அடுத்த அப்டேட்... ரிலீஸ் பத்தி சொல்ல மாட்டேங்கறாங்களே... ரசிகர்கள் கேள்வி!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களான டாக்டர் மற்றும் டான் வெளியாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எஸ்கே20 படம் வரும் ஆகஸ்டில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் அவருக்கு நடிப்பிலும் தயாரிப்பிலும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இதனால் மனிதர் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

 ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு

இந்த இரு படங்களில் டாக்டர் படம் அவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை ரசிகர்களுக்கு கொடுத்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. அடுத்ததாக கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள டான் படத்தில் அவர் வழக்கமான அலப்பறைகளை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

 ரூ.60 கோடி வசூல்

ரூ.60 கோடி வசூல்

இந்தப் படம் கடந்த சில தினங்களிலேயே 60 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபிசில் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. நிலைமை இப்படியே தொடரும் நிலையில் இன்னும் சில தினங்களில் 100 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

வாரயிறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளை இந்தப் படம் எதிர்கொண்டு வருகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்பா -மகன் சென்டிமெண்ட் மற்றும் ஆசிரியர் -மாணவர் உறவை படத்தில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி சிறப்பாக கையாண்டுள்ளார்.

அயலான் படத்திற்கு எதிர்பார்ப்பு

அயலான் படத்திற்கு எதிர்பார்ப்பு

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே20 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீசை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சயின்ஸ் பிக்ஷன் படம்

சயின்ஸ் பிக்ஷன் படம்

இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டுள்ளது. பூமிக்கு வரும் ஏலியன்சை வைத்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் ரவிக்குமார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து நீண்ட நாட்களாக படத்தின் சிஜி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்குள் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்றுத் தீர்ந்த டப்பிங் உரிமை

விற்றுத் தீர்ந்த டப்பிங் உரிமை

படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ரகுல் பிரீத் சிங் ஜோடியாகியுள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் உரிமை மட்டுமே 13 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X