சிவகார்த்திகேயனோட பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் பரிசு... என்னன்னு பாருங்க!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்தடுத்த சிறப்பான படங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவா நடித்துள்ள அயலான் படத்தின் சிஜி வேலைகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு அவர் ட்ரீட் தர காத்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணியில் ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை தந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் அலப்பறையுடன் மற்றும் காமெடியுடன் அவர் நடித்திருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காமெடி கலாட்டாக்கள்

காமெடி கலாட்டாக்கள்

தொடர்ந்து ரெமோ உள்ளிட்ட படங்களில் காமெடி கலாட்டாக்களை செய்திருந்தாலும் அவரது பன்பட்ட நடிப்பு அந்தப் படங்களில் வெளிப்பட்டது. சமீபத்தில் வெளியான டாக்டர் படத்திலும் மற்றவர்களை அதிகமாக காமெடி செய்யவிட்டு இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அமைதியான நடிப்பு

அமைதியான நடிப்பு

என்னடா என்னோட வேலையை நீங்க எடுத்துக்கிட்டீங்க எண்ணும்படியாக இவரது நடிப்பு இருந்தது. படத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும் வில்லன்கள் விஷயத்தில் தான் இப்படித்தான் எண்ணும்படியாக இவரது நடிப்பு தீவிரமாகவும் இருந்தது.

டான் படம்

டான் படம்

ஆனாலும் சிவா என்றால் அலப்பறை தான் எண்ணும்படியாக தற்போது இவரது அடுத்தப்படம் டான் காணப்படுகிறது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வழக்கமான சிவாவை நமக்கு கொடுத்தது. இந்தப் படத்தில் கூடுதல் போனசாக அவர் கல்லூரி மாணவராக வேறு நடித்திருக்கிறார்.

அயலான் படம்

அயலான் படம்

இந்நிலையில் நீண்ட நாட்களாக இவரது நடிப்பில் வெளியாகாமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது அயலான் படம். இந்தப் படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சிஜி வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

சயின்ஸ் படம்

சயின்ஸ் படம்

வேற்று கிரகவாசி பூமிக்கு வருவதை கருவாக வைத்து இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்,ஷரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் தரத்தில் கேமரா

ஹாலிவுட் தரத்தில் கேமரா

இந்தப் படத்திற்கு முதல்முறையாக ஹாலிவுட் படங்களுக்கு பயன்படுத்தப்படும் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் ஏலியனுடன் காணப்படும் சிவாவின் போஸ்டர்கள் மற்றும் ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

ஹாலிவுட் தரத்தில் படம்

ஹாலிவுட் தரத்தில் படம்

ஹாலிவுட் தரத்திற்கு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிவாவிற்கு இந்தப் படம் சிறப்பானதாக அமையும் என்றும் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X