twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜமானது ‘கனா’.. ரீல் சிவகார்த்திக்கேயனாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்.. அவரை மாதிரியே அசத்துவாரா?

    கனா படத்தில் வரும் சிவகார்த்திகேயன் போலவே தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.

    |

    சென்னை: கனா படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்த கதாபாத்திரம் போலவே தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. இந்த படத்தில் கவுசல்யா முருகேசன் எனும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

    Sivakarthikeyan’s character in ‘Kanaa’ becomes a real instance with South Africa’s former Cricketer Mark Boucher

    கனா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நெல்சன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி, இளம் கிரிக்கெட் வீரரான சிவகார்த்திகேயன், முதல் மேட்சிலேயே நூறு ரன்கள் எடுத்து அசத்துவார்.

    ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யும் போது, அவரது கண்ணில் ஸ்டெம்பு பட்டு காயம் ஏற்பட்டு விடும். இதனால் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, இந்திய கிரிக்கெட் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்.

    கும்முற டப்புற முதல் வெறித்தனம் வரை.. 2019ல் உங்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 10 பாடல்கள் இதோ!கும்முற டப்புற முதல் வெறித்தனம் வரை.. 2019ல் உங்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 10 பாடல்கள் இதோ!

    இதேபோல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரரான மார்க் பவுச்சர், விக்கெட் கீப்பிங் செய்யும் போது கண்ணில் அடிப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கனா படத்தில் வரும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் போலவே மார்க் பவுச்சர் வாழ்க்கையிலும் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையம் முழுதும் இப்போது இந்த விசயம் தான் வைரலாகி வருகிறது.

    English summary
    Former South African Wicket keeper Mark Boucher, officially appointed as the new head coach of South African Cricket Team. It is worth mentioning that he had his retirement from International Cricket in 2019 after a serious eye injury during a game as wicket keeper. It left the Netizens and Twitteratis to instantly connect it with the fictional characterization of Sivakarthikeyan in ‘Kanaa’, where he comes back as a coach of Indian Women Cricket Team after his retirement from the game due to eye injury.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X