சிவகார்த்திகேயன் சும்மா மிரட்டுறாரே.. நெல்சனின் டாக்டர் டிரைலர் வேற மாறி இருக்கு பாஸ்!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

கேஜேஆர் நிறுவனம் தயாரிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி உள்ள படம் தான் டாக்டர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் போதைப் பொருள் கடத்தல் கருவாக கையாளப்பட்டு டார்க் காமெடி திரைப்படமாக வெளியாகி ஹிட் அடித்தது.

சிவகார்த்டிகேயனின் டாக்டர்

சிவகார்த்டிகேயனின் டாக்டர்

கோலமாவு கோகிலா படத்தின் அதிரடியான வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கி உள்ள டாக்டர் திரைப்படம் கொரோனா காரணமாக பல ரிலீஸ் தேதிகளை கடந்து தற்போது வரும் அக்டோபர் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

டாக்டர் டிரைலர்

டாக்டர் டிரைலர்

இந்நிலையில், தற்போது டாக்டர் படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி மிரட்டி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனே டாக்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். தியேட்டரில் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையும் நிறைவேற உள்ளது.

அனிருத் அட்டகாசம்

அனிருத் அட்டகாசம்

கோலமாவு கோகிலா படத்திற்கு போட்டது போலவே எங்கே சவுண்ட் இருக்கணும் எங்கே இருக்கக் கூடாது என பிஜிஎம்மில் வெரைட்டி காட்டி விளையாடி இருக்கிறார் ராக்ஸ்டார் அனிருத். செல்லம்மா பாடலை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கோலமாவு கோகிலா 2வா

கோலமாவு கோகிலா 2வா

டாக்டர் படத்தின் டிரைலரை பார்த்த பலருக்கும் இது என்ன கோலமாவு கோகிலா 2 போலவே வித்தியாசமாக மிரட்டுகிறது என்கிற ஆச்சர்யம் எழத்தான் செய்தது. அதே போல ஒரு குடும்பம், அந்த குடும்பம் கடத்தல் தொழிலில் ஈடுபது போன்ற காட்சிகள் மீண்டும் கோகோவை ஞாபகப்படுத்தினாலும், இந்த கதை கரு வேறு தளத்திற்கு சென்று மிரட்டுகிறது.

இளம்பெண்களை கடத்துவது

இளம்பெண்களை கடத்துவது

போதைப் பொருள் கடத்தல் கதையை கோலமாவு கோகிலா படத்தில் சொன்ன இயக்குநர் நெல்சன் இளம் பெண்களை கடத்தி விற்கும் கதையை டாக்டர் படத்தில் கூறியுள்ளார். அதே போல உறுப்புகள் கடத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கோலமாவு கோகிலா போலவே டார்க் காமெடியில் சிவகார்த்திகேயனும், தீபா உள்ளிட்ட நடிகர்களும் வசனங்களில் சிரிக்க வைக்கின்றனர்.

ஆக்‌ஷனும் இருக்கும்

டிரைலரின் கடைசியில் ரத்த வெள்ளத்தில் கட்டப்பட்டு இருக்கும் சிவகார்த்திகேயனிடம் வினய் யாருடா நீ? என கேட்க டாக்டர் என சொல்வதை பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த நொடியே வெறித்தனமான ஆக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் வேற லெவலில் டிரைலரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் எப்படி இருககும்

பீஸ்ட் எப்படி இருககும்

டாக்டர் டிரைலரை பார்த்த தளபதி ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக பீஸ்ட் படம் எப்படி இருக்கப் போகிறது. சீக்கிரம் அதன் டீசர் மற்றும் டிரைலரை வெளியிடுங்க நெல்சன் என கோரிக்கை வைத்து காத்திருக்கின்றனர். டாக்டர் நிச்சயம் தியேட்டர்களில் மக்கள் கூட்டத்தை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி வாழ்த்து

தளபதி வாழ்த்து

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்த தளபதி விஜய் டிரைலர் மெர்சலா இருக்கு என இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X