twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பாராட்டை அள்ளிய சிவகார்த்திகேயன் மகள்

    |

    சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் துவங்கியது. இதில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000-க்கும் அதிகமான வீரர்கள் கலந்துக் கொண்டனர். மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கடந்த 4 மாதங்களில் தமிழக அரசு செய்து முடித்தது.

    இதையடுத்து கடந்த 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி, தமிழர் வரலாறு குறித்து நடிகர் கமல் ஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண், இணையத்தில் வைரல் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடல் என ஒலிம்பியாட் விழா களை கட்டியது.

    Sivakarthikeyans daughter Aaradhana sung Tamil thai Vazhtthu in Chess Olympiad closing ceremony

    இந்த துவக்க விழா நிகழ்வை பிரபல டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இவர் விழா தொடங்கிய போது வாக்கி டாக்கியுடன் சில அறிவுறுத்தல்களை சொல்லி வந்தார். இந்த விழா சிறப்பாக நடந்ததாக அனைவருமே விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 9) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைப்பெற்றது. இதில் இடம்பெற்ற விதவிதமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.

    கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக லேசர் லைட் மூலமாக இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடி சாகசம் செய்து, கண்களுக்கும், காதுகளுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தினர். அவர்கள் வாசித்த இசையில் ரஜினிகாந்தின் வெற்றி கொடி கட்டு பாடலும், விஜய்யின் ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே ஆகியப் பாடல்கள் இடம்பெற்றன.

    நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் ஆராதனா, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அசத்தினார்.இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.ஆராதனா, சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டினார்.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி.. விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி!ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டினார்.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி.. விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி!

    English summary
    Chess Olympiad 2022 closing ceremony was held in Chennai today. In this ceremony actor Sivakarthikeyan' daughter Aaradhana sung Tamilthai Vazhtthu.In this ceremony Rajinikanth's Vettri kodi kattu, Vijay's Azhaporan Tamizhan, Singa penae songs are played by musical artists.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X