மெரினாவுக்கு முன்னாடி.. இந்த பெண் இயக்குநர் படத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆகவேண்டியது!

சென்னை: மெரினா படத்திற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன், ஒரு படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட விஷயம் இப்போதுதான் வெளியாகி உள்ளது.

Recommended Video

Actor Soori Marriage Album | Quarantine | Lock Down Days

விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன், பல குறும்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

உச்சத்தில்

உச்சத்தில்

தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ ஆக்கியது. தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுக்க சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் இமான் இசையில் வெளியான "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" பாடல், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வந்த இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை வெகுவாக பாதித்தது. அந்த வார்த்தைக்காக சிவகார்த்திகேயனை நேரடியாக விளாசி இருந்தார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

இவர் படத்தில் தான்

இவர் படத்தில் தான்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பிரச்சனை பலரும் அறிந்தது தான். ஆனால், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய ரகசியம் பலரும் அறியாத ஒன்று. சமீபத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய சந்தேகத்தில் இருந்து இந்த உண்மை வெளியாகி இருக்கிறது.

மும்பை சம்பவம்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 'குறள் 786' படத்தை இயக்கிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், அந்த படத்தில் தான் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தார். நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த விஷயம் புகைப்பட ஆதாரத்துடன் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆனால்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரசிகர் ஒருவர், எப்போது மேடம் இந்த ஷார்ட் பிலிமை ரிலீஸ் பண்ணுவீங்க எனக் கேட்க, அது குறும்படம் இல்லை 'குறள் 786' என்கிற படம், நான் தான் சிவகார்த்திகேயனை அந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்திருக்க வேண்டும், நல்ல வலிமையான கதாபாத்திரம், தொடர்ந்து எடுக்க முடியாமல் அப்படியே டிராப் ஆனது என பதிவிட்டுள்ளார்.

படு பிசி

படு பிசி

நம்ம வீட்டுப் பிள்ளை ஹிட் கொடுத்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மித்ரனின் ஹீரோ படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கவில்லை. இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என இரு படங்களில் படு பிசியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X