சிவா படத்துக்கா இந்த நிலைமை... முதல் முறையா இந்த சூழலை சந்தித்த சிவகார்த்திகேயன்
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் டாக்டர்.
இந்த படத்தின் சென்சார் உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஆயினும் தற்போதைய கொரோனா சூழலில் படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

பாதித்த திரைத்துறை
கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அனைத்து துறைகளையும் பாதித்துள்ள நிலையில் திரைப்படத் துறையும் கடுமையாக பாதித்து வருகிறது. படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டும் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பின்பு சில படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன.

படத்திற்கு எதிர்பார்ப்பு
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி திரையிட தயாராக உள்ள டாக்டர் படத்தையும் ரிலீஸ் செய்யாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

யூ/ஏ சான்றிதழ்
இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்கள் அனைத்திற்கும் யூ சான்றிதழ் கிடைத்த நிலையில் முதல் முறையாக டாக்டர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேள்விகளை எழுப்பிய சான்றிதழ்
எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்வகையில் சிவகார்த்திகேயன் படங்கள் அமைந்துவிடும். அவரது படங்களுக்கு நம்பி குழந்தைகளை அழைத்து செல்ல முடியும். இந்நிலையில் இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது படம் குறித்த கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











