சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல் காப்பியா..? ரசிகர்கள் ஷாக் !

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அனிருத் இசையமைக்க அந்த படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்த்து படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

இவ்வாறு சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மீண்டும் இணையும் டாக்டர் திரைப்படத்தின் முதல் பாடல் "செல்லம்மா" வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் செல்லம்மா பாடல் சிம்புவின் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி

அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில நடிகர்களும் இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற கோட்பாடு இன்று வரை தொடர்ந்து வருகிறது. அவ்வாறு வெற்றிக்கூட்டணி என பலராலும் பார்க்கப்பட்டு வரும் பாரதிராஜா இளையராஜா, விக்ரமன் எஸ்.ஏ ராஜ்குமார். இந்த வரிசையில் தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வருவது அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி.

எதிர்நீச்சல் படத்தில் உருவான

எதிர்நீச்சல் படத்தில் உருவான

எதிர்நீச்சல் படத்தில் உருவான இவர்களது கூட்டணி மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன் என இன்றுவரை வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பலரையும் சிரிக்கவும் ரசிக்கவும்

பலரையும் சிரிக்கவும் ரசிக்கவும்

டாக்டர் படத்தை பற்றிய பல்வேறு அப்டேட்டுகள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கும் நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடலான "செல்லம்மா" வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியிடுவதற்கு முன்பாகவே அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய செல்லம்மா பாடலின் கலகலப்பான ப்ரோமோ பலரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த நிலையில் இந்த பாடல் இப்போது வெளியாகி பலரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.

காப்பி அடிக்கப்பட்டது

காப்பி அடிக்கப்பட்டது

"செல்லம்மா" பாடல் வெளியாகி பலராலும் பார்க்கப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தற்பொழுது இந்த பாடலின் இசை சிம்புவின் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என ஒரு சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.

ஸ்லோமோஷனில் வாசித்தால்

ஸ்லோமோஷனில் வாசித்தால்

சிம்பு நடித்த தம் திரைப்படத்தில் வரும் "கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா" என்ற கானா பாடலின் இசையை ஸ்லோமோஷனில் வாசித்தால் அது செல்லம்மா பாடலின் இசை என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கும் பாடல்களுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல.

சொல்வது முறையல்ல

சொல்வது முறையல்ல

கத்தி, தர்பார், வேதாளம் என இவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என தொடர்ந்து விமர்சனம் வைத்துக்கொண்டு தான் வருகின்றனர். எனினும் பாடலில் ஓரிரு இடங்களில் வரும் இசையை வைத்து அந்த பாடல் காப்பி அடிக்கப்பட்டது என சொல்வது முறையல்ல என்று ஒருசிலர் அனிருத்திற்கு சாதகமாகவும் பேசியுள்ளனர்.

Recommended Video

ACTRESS PUJITHA | சூர்யா கூட நடிக்க ஆசை | V-CONNECT | FILMIBEAT TAMIL
ரசித்துக் கொண்டுதான்

ரசித்துக் கொண்டுதான்

இவ்வாறு பல விமர்சனங்கள் அனிருத்தின் இசையின் மேல் வைக்கப்பட்டாலும், என்றும் இவரது இசைக்கு அடிமையான பல இளைஞர்கள் அதைத்தொடர்ந்து ரசித்துக் கொண்டுதான் வருகின்றனர். எது எப்படியோ செல்லம்மா பாடல் தற்போது வெளியாகி சக்கை போடு போட்டு வைரலாகி அனைவரையும் குத்தாட்டம் போட வைத்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X