சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு இப்படியொரு சிறப்பா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நெட்டிஃபிளிக்ஸ் குளோபல் டாப் 10 லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

குறையும் மவுசு
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில அண்ணாத்த படத்தால் அண்டை மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் மவுசு குறைந்துள்ளதாக கூறியுள்ளார் பிகே. வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் 50 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினி படம் வசூலை குவிக்கும். ஆனால் அண்ணாத்த படம் 10 கோடி ரூபாயை கூட தாண்டாததால் இப்படி ஒரு தகவல் பரவி வருவதாக கூறியுள்ளார் பிகே.

இளையராஜாவின் படம்
இதேபோல் அமெரிக்காவின் டைம் சதுக்கத்தில் இளையராஜாவின் படம் இடம்பெற்றது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் 45 ஆப்பில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இளையராஜாவின் படம் புகழ் பெற்ற டைம் சதுக்கத்தில் இடம்பெற்றதாக கூறியுள்ளார்.

தமிழக உரிமை
அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கி வரும் படம் புஷ்பா. இந்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் பெற்றுள்ள தகவலை கூறியுள்ளார் பிகே.

ஏஆர் ரஹ்மான் டிவிஸ்ட்
இதேபோல் ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் டிசம்பரில் சூப்பர் ட்ராக் வெளியாகும் என டிவிஸ்ட் வைத்தது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதையும் கூறியுள்ளார் பிகே.

குளோபல் டாப் 10 பட்டியல்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் குளோபல் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











