கேம் ஆஃப் த்ரோன்ஸ் இன்ஸ்பிரேஷனா.. கத்தியெல்லாம் கீழே கிடக்குது.. டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

Recommended Video

Doctor Official First Look Released | Sivakarthikeyan | Nelson | Priyanka Mohan

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை முதலே பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ட்ரீட்டாக இன்று காலை 11.03க்கு டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் என அறிவிக்கப்பட்டதை போலவே, ஷார்ப்பா டாக்டர் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

எப்படி இருக்கு?

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன், பிரவுன் கலர் டி-சர்ட், ப்ளூ கலர் பேன்ட் மற்றும் கண்ணாடி அணிந்து, கபாலி ரஜினி போல நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். காலுக்கு கீழே ரத்தம், ஆபரேஷன் சிசர்ஸ் மற்றும் கத்தி என அனைத்தும் சிதறி கிடக்கின்றன. கேம் ஆஃப் த்ரோன்ஸ் போஸ்டர் இன்ஸ்பிரேஷன் போல ஃபர்ஸ்ட் லுக் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெறி ஏறுது

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், வெறி ஏறுது என்றும், செம்ம மாஸாக உள்ளது என்றும், வேற லெவல் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஹீரோ படத்தைத் தொடர்ந்து, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

மாஸ் ஒன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கோலமாவு கோகிலா எனும் டார்க் காமெடி படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மாஸ் ஒன் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஆப்பரேஷன் ஸ்டார்ட்

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காலை முதலே ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த இந்த ரசிகர், ஆப்பரேஷன் ஸ்டார்ட் என கமெண்ட் செய்து வாழ்த்தியுள்ளார்.

அயலான் இயக்குநர் வாழ்த்து

சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் பரிசாக டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார், டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெற படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே, எஸ்.கே. ரசிகர்கள் அயலான் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X