சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட்.. நாளைக்கு ரிலீசாகுது டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்

Recommended Video

Ayalaan first look out now| வெளியானது அயலான் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்த நாளை முன்னிட்டு, டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பர்த்டே ட்ரீட்டாக ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.

தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், #DoctorFirstLook என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சின்னத்திரையில் இருந்து படிப்படியாக முன்னேறி தற்போது வெள்ளித்திரையில், முன்னணி இளம் ஹீரோவாக சிவகார்த்திகேயன் முன்னேறியுள்ளார். அவரது விடா முயற்சி மற்றும், கடின உழைப்பு தான் சிவகார்த்திகேயனை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாளை பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் அப்டேட் கிடைத்துள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பர்த்டே மாஷ் அப்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், காமெடியனாக அறிமுகமாகி, அது இது எது, விஜய் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக முன்னேறி, மெரினா படத்தின் மூலம் ஹீரோவான சிவகார்த்திகேயன், இன்று தனது ரசிகர்களின் கவலைகளை போக்கும் டாக்டர் அவதாரம் எடுத்துள்ளார். அதன் மாஷ் அப் வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தல ரசிகர்

தல ரசிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் வெறித்தனமான ரஜினி மற்றும் அஜித் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தனது படங்களில், ரஜினி மற்றும் அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களையும் தொடர்ந்து வைத்து அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாக உள்ள நிலையில், அஜித் ரசிகர்களின் ஆதரவுகளும் அவருக்கு கிடைத்து வருகின்றன.

கோலமாவு கோகிலா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா எனும் செம காமெடி த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உருவாகி வருகிறது. சிம்புவின் வேட்டை மன்னன் படத்தையும், நெல்சன் தான் இயக்குவதாக இருந்தது பின்னர், அந்த படம் டிராப் ஆனது.

அப்போ அயலான் அப்டேட்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் அப்டேட் எங்கே? என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வேற லெவல் டிரெண்டிங்

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், #HBDSK, #HBDSivaKarthikeyan மற்றும் #DoctorFirstLook என்ற மூன்று ஹாஷ்டேக்குகளை உருவாக்கி அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X