செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் சூர்யாவின் 40வது படத்தில் நடிக்கவுள்ள ஹீரோயின் இவர் தான் என சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு டி. இமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார்.

அதிர்ஷ்டக்கார டாக்டர்

அதிர்ஷ்டக்கார டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சனுக்கு தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அந்த படத்தில் நடித்த நாயகி பிரியங்கா மோகனுக்கு சூர்யாவின் 40வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் ரொம்பவே அதிர்ஷ்டக்காரன் தான் போல.. சிவகார்த்திகேயனும் லைகா தயாரிப்பில் நடிக்கப் போறாரே!

சூர்யா 40

சூர்யா 40

ஹரியுடன் அருவா படத்தில் நடிக்கப் போவதில்லை என்கிற அதிரடி முடிவை எடுத்த நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 என அடுத்தடுத்து பிசியாகி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள சூர்யா 40 திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

ஹீரோயின் யாரு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள நடிகை பிரியங்கா மோகன் தான் சூர்யாவின் 40வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

நானி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான கேங் லீடர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். டோலிவுட்டில் ஒந்த் கதே ஹெல்லா மற்றும் ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக சூர்யாவின் 40வது படத்தில் கமீட் ஆகி உள்ளார்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்

டிரெண்டாகும் ஹாஷ்டேக்

சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக சூர்யாவின் 40வது படத்தின் நாயகி பிரியங்கா மோகன் தான் என அறிவித்துள்ள நிலையில், #Suriya40bySunPictures என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் வேற லெவலில் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து, பிரியங்கா மோகனை வரவேற்று வருகின்றனர்.

ஆஸ்கர், கோல்டன் குளோப்

ஆஸ்கர், கோல்டன் குளோப்

தமிழில் ஒருபக்கம் கலக்கிக் கொண்டு இருக்கும் சூர்யா, மறுபக்கம் சூரரைப் போற்று படத்தின் மூலம் ஆஸ்கர், கோல்டன் குளோப் என அசத்தி வருகிறார். ஆஸ்கர் விருது போட்டியில் சூர்யாவின் சூரரைப் போற்று இடம்பெற்று இருப்பது தமிழ் சினிமாவுக்கே பெருமையாக அமைந்துள்ளது. கோல்டன் குளோபில் 4வது சுற்றுக்கு சூரரைப் போற்று முன்னேறி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. விருது கிடைக்கட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X