100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
சென்னை: டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
Recommended Video
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் ஹீரோ. அதனை தொடர்ந்து டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார்.
இதில் டாக்டர் படத்தை இயக்குநர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

யூட்யூப்பில் ரிலீஸ்
இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. படத்தை வரும் 26ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி யூட்யூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது.

சிவகார்த்திகேயன் எழுதியது
இந்தப் பாடலை அனிருத் மற்றும் பாடகி ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியிருந்தனர். இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

100 மில்லியன் வியூஸ்
மேலும் இப்பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே 25 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்பாடல் தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

ராக்ஸ்டாரின் அடுத்த சென்ட்சுரி
இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலுடன் கூடிய ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் நம் ராக் ஸ்டார் அனிருத்தின் அடுத்த சென்ட்சுரி என்றும் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
வோர்ல்டு வைடு ஃபேவரைட்
அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் அனிருத்தின் மேஜிக்கல் காம்போவில் வோர்ல்டு வைடு ஃபேவரைட் செல்லம்மா என்று பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications