இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்

Recommended Video

Doctor Official First Look Released | Sivakarthikeyan | Nelson | Priyanka Mohan

இதுவும் சுட்டதுதானா.. வந்துட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்

இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்!

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் அமர்ந்திருப்பது தனுஷை பார்த்து அடித்த காப்பி என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது அயலான், டாக்டர் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நேற்று முன்தினம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அந்த இரண்டு படங்களின் போஸ்டரும் ஒரே நாளில் வெளியானது.

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

இதில் அயலான் போஸ்டரில் ஏலியனுடன் கையில் லாலி பப்புடன் அமர்ந்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இதேபோல் டாக்டர் போஸ்டரில் ஆப்ரேஷன் கத்திகள் சுற்றி சிதற சேரில் கால் மேல் கால் போட்டு கையில் ரத்தக்கறையுடன் அமர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

நைஃப் அவுட்

நைஃப் அவுட்

சிவகார்த்திகேயனின் இந்த போஸ்டர்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கினர். அதேநேரத்தில் அந்த போஸ்டர் எங்கிருந்து சுடப்பட்டது என கண்டுபிடித்து ஒரு கூட்டம் ட்ரோல் செய்தது. அதன்படி, டாக்டர் படத்தின் போஸ்டர் நைஃப் அவுட்டிலிருந்து வெளியானது என கண்டுபிடித்து மரண கலாய் கலாய்த்தனர்.

தனுஷ் காப்பி

தனுஷ் காப்பி

இந்நிலையில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் சேரில் உட்காந்திருக்கும் போஸ்டர், தனுஷை பார்த்து காப்பியடித்தது என கண்டுபிடித்து இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். போஸ்டரில் இடம்பெற்றுள்ள எல்லா சம்பவமும் காப்பிதானா என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

சிக்கிய சிவகார்த்திகேயன்

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் தனுஷ்க்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்த தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்தனர். சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக்கொள்ளும் நிலையில் இப்படி தனுஷ் ரசிகர்களிடம் வசமாக சிக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X