ஆரம்பமானது டாக்டர் டப்பிங்.. இதுக்கும் பூஜை போட்ட சிவகார்த்திகேயன்.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜை உடன் ஆரம்பமாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர்.
இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மீள வேண்டும்
சீமராஜா, மிஸ்டர் லோக்கல் மற்றும் ஹீரோ படங்களின் தொடர் தோல்வியால் சிக்கித் தவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இதில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக, நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் உடன் கைகோர்த்துள்ள படம் தான் டாக்டர்.

அதே நிலைமை
தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெயம் ரவியின் பூமி படங்களுக்கு ஏற்பட்ட அதே கொரோனா சிக்கல் நிலைமை தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்கும். இன்னும் கொஞ்சம் ஷூட்டிங் பாக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூஜை உடன் டப்பிங்
பொதுவா படம் துவங்குவதற்கு முன்பாக பூஜை போடுவது வழக்கம். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் பூஜை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ஒருவேளை கொரோனா பிரச்சனை சீக்கிரமே முடிந்து படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோ என்னவோ!

வைரலாகும் புகைப்படங்கள்
டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் நெல்சன், விஜே அர்ச்சனா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் ரசிகர்கள், #Doctor என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி வேற மாறி டிரெண்டிங்கை செய்து வருகின்றனர்.

ஹீரோயின் குரலுக்கா
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். தெலுங்கில் நானியின் கேங் லீடர் படத்தில் நடித்த இவர், தற்போது முதன் முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார். இவரது வாய்ஸ்க்கு குரல் கொடுக்கப் போகிறாரா? அர்ச்சனா அல்லது வேறு ஏதாவது முக்கியமான லீடு லேடிக்கு குரல் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வேற மாறி ஹிட்
ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் ஜோனிடா காந்தி, அனிருத் குரலில் வெளியான செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. சிவகார்த்திகேயன் அனிருத் காம்போ என்றாலே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆவது வழக்கமாகவே மாறிவிட்டது.
Recommended Video

சீக்கிரம்
விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படம் ஒடிடி தளமான ஜி ப்ளெக்ஸில் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், இந்த படமும் சீக்கிரமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தீபாவளிக்கு ஒடிடியிலா? அல்லது பொங்கலுக்கு தியேட்டரிலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











