ரன் டைம்.. தணிக்கை சான்றிதழ் எல்லாம் வந்து என்ன பிரயோஜனம்.. டாக்டர் தான் இப்போ ரிலீஸ் இல்லையே!

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், படத்தின் ரன் டைமும் வெளியாகி உள்ளது.

மார்ச் 26ம் தேதி ரிலீசாக வேண்டிய டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக தள்ளிப் போனது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படத்தின் தயாரிப்பாளர் கொரோனா பாதிப்பு முடியும் வரை ரிலீஸ் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை அன்ஃபாலோ

சிவகார்த்திகேயனை அன்ஃபாலோ

டாக்டர் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் அன்ஃபாலோ செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. டாக்டர் படத்தின் ரிலீஸ் பஞ்சாயத்து தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிலீஸ் பேச்சுக்கே இடமில்லை

ரிலீஸ் பேச்சுக்கே இடமில்லை

முழுவதுமாக தயாராகி உள்ள டாக்டர் படத்தை வெளியிட முடியாமல் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு என்றாலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நெருக்கடியான சூழலில் டாக்டர் ரிலீஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என கேஜேஆர் நிறுவனம் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

எதுவுமே சொல்லல

எதுவுமே சொல்லல

கேஜேஆர் நிறுவனம் அறிவித்த அந்த பதிவு குறித்தும் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் அந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவே இல்லை. இந்நிலையில், டாக்டர் படத்தின் தணிக்கை சான்று வந்துள்ளதாகவும் கேஜேஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன சர்டிபிகேட்

என்ன சர்டிபிகேட்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள டாக்டர் படத்திற்கு யுஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி இருக்கிறது. டாக்டர் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்துள்ள நிலையில், #Doctor ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ரன் டைம்

ரன் டைம்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 28 நிமிடம் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ரம்ஜானை முன்னிட்டு டாக்டர் திரைப்படம் இன்று வெளியாகும் என காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், படம் ஒடிடியில் கூட சீக்கிரத்தில் வெளியாகாது என்கிற அறிவிப்பால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X