அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவ கார்த்திகேயன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

தெலுங்கு நடிகை ஜோடி

தெலுங்கு நடிகை ஜோடி

இப்படத்தில் தெலுங்கு நடிகையான பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

பாடல்களுக்கு நல்ல வரவேற்பு

பாடல்களுக்கு நல்ல வரவேற்பு

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் தேர்தல், கொரோனா இரண்டாவது அலை போன்ற காரணங்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் டாக்டர்

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் டாக்டர்

நாட்கள் கடந்து கொண்டே இருந்ததால் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அதனை படக்குழு மறுத்து வந்தது. இந்நிலையில்

சில தினங்களுக்கு முன்பு டாக்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

அக்டோபர் 9 ஆம் தேதி

அக்டோபர் 9 ஆம் தேதி

இந்நிலையில், இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அக்டோபர் 9 முதல் தியேட்டரில் என்ற டாக்டர் போஸ்டருடன் தியேட்டரில் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு

ரொம்ப சந்தோஷமா இருக்கு

டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அறிந்த இந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில், அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எவ்வளவு நாளைக்கு அப்புறம் உங்களை தியேட்டர்ல பார்க்க போறோம் என தெரிவித்துள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X