அட கடவுளே.. தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ்?
சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகையான பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இரண்டு சிங்கிள்ஸ்
இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகியுள்ளது. செல்லம்மா என்ற பாடலும் சோ பேபி என்ற பாடலும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளிபோக வாய்ப்பு
இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

படக்குழு ஆலோசனை
தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலுக்கு பின் வெளியிட படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











