சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. படக்குழு திடீர் அறிவிப்பு!
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.
தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்கள்
இப்படத்தில் தெலுங்கு நடிகையான பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளது.

இரண்டு பாடல்கள்
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகியுள்ளது. செல்லம்மா என்ற பாடலும் சோ பேபி என்ற பாடலும் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளிபோக வாய்ப்பு
இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல் பரவி வந்தது.

படக்குழு ஆலோசனை
தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலுக்கு பின் வெளியிட படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்பட்டது.

ரிலீஸ் தள்ளி வைப்பு
இந்நிலையில் டாக்டர் படம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை முன்னிட்டு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான தேதி குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தேதியில் பாடல்
விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும், காத்திருக்க டாக்டர் படம் வொர்த்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியில் டாக்டர் படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள் என்றும் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











