வேற லெவலில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் அப்டேட்.. இதுக்கே அள்ளுதே.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒருவாகும் டாக்டர் படம் குறித்த அப்டேட்டை அசத்தலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் பட்டைய கிளப்பியது.

ஆனால் அவரது நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்ல வில்லை.

டாக்டர் படம்

டாக்டர் படம்

இந்நிலையில் டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் டாக்டர் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டாக்டர் அப்டேட்

டாக்டர் அப்டேட்

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக இப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டாக்டர் படத்தின் அப்டேட் வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நச்சரித்து வந்தனர்.

அப்டேட்டோட வரோம்

அப்டேட்டோட வரோம்

அதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. "ஓயாம டாக்டர் அப்டேட் கேட்டதற்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது. இன்று மாலை 7 மணிக்கு. அலாரம் வெச்சுக்கோங்க பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ். அப்டேட்டோட வரோம் என கேஜேஆர் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

செல்லம்மா பாடல்

செல்லம்மா பாடல்

அதனை தொடர்ந்து 7 மணிக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் அந்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. அதில் டாக்டர் படத்தின் முதல் பாடல் செல்லம்மா வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோருக்கு இடையே நடக்கும் கான்வெர்சேஷனை ஒரு குட்டிப் படம் போல காட்டியுள்ளனர்.

டிக்டாக் வேணுமே

டிக்டாக் வேணுமே

சிவகார்த்திகேயன் அனிருத்திடம் பாடல் கேட்கும் போது, "டிக்டாக்கில் நம்ம பாட்டு தான் ட்ரெண்ட் ஆகனும் சார்" என கேட்க, ‘அதற்கு மொதல்ல டிக்டாக் இருக்கனும் சார்' என கூறுகிறார் அனிருத். முதலில் டிக்டாக்கை கொண்டுவாங்க அப்புறம் பாட்டு பண்ணலாம் என்கிறார் அனிருத்.

Recommended Video

Doctor Official First Look Released | Sivakarthikeyan | Nelson | Priyanka Mohan
நான்தானே லிரிக்ஸிஸ்ட்

நான்தானே லிரிக்ஸிஸ்ட்

இதனால் நொந்து போகும் நெல்சன், அவரே எப்போ காரணம் கிடைக்கும்னு பார்த்துக்கிட்டு இருக்காரு, அவருக்கிட்ட போய் டிக்டாக் பத்தி பேசி சொதப்பிட்டிங்களே என்கிறார் நெல்சன். நீங்கள் தான் புரெடியூசர் என ஞாபகப்படுத்தும் நெல்சனிடம், நான்தானே லிரிக்ஸிஸ்ட் என பிட்டை போட்டு டிக்டாக் தடை செய்யப்பட்டதையே பாடலாக்கலாம் என்கிறார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

பாடலுக்கு முந்தைய இந்த அறிமுக வீடியோவே மாஸாக உள்ளதால் பாடல் படா மாஸாகவும் ட்ரென்டியாகவும் இருக்கும் என்றும் சிலாகித்து வருகிறார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள். அதோடு #Doctor என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X