ஓடிடியில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்... ஆகஸ்டில் வெளியாக வாய்ப்பு

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலின் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது.

இந்நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் படம்

டாக்டர் படம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக இந்த படம் வெளிவர முடியாமல் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது.

முடங்கியுள்ள படம்

முடங்கியுள்ள படம்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். கடந்த மார்ச் 26ம் தேதியே இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலையொட்டி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தொடர்ந்து கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது.

அனிருத் இசை

அனிருத் இசை

இசையமைப்பாளர் அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

Recommended Video

நடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
3 மொழிகளில் ரிலீஸ்

3 மொழிகளில் ரிலீஸ்

இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாகவும் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X