தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளி போன "டாக்டர்".. இது தான் ரிலீஸ் தேதியா?
சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர்.
இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார், ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து
தயாரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது தள்ளி போடப்பட்டுள்ளது.

தாமதமான டீசர்
ரிலீசுக்கான பணிகளை முன்னர் தொடங்கிய படக்குழு முதற்கட்டமாக பாடல்களையே தொடர்ந்து வெளியிட்டு வந்தது. செல்லம்மா, நெஞ்சமே ஆகிய பாடல்களை தொடர்ந்து சமீபத்தில் சோ பேபி பாடலை வெளியிட்டது. டீசரை வெளியிடுவதில் தாமதம் செலுத்தியது படக்குழு.

தேதி மாற்றம்
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், இந்நேரத்தில் படம் வெளிவந்தால் சரியாக இருக்காது என படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாகவும், புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை விட்டிருந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதைத்தொடர்ந்து டாக்டர் படக்குழு சம்மர் ரிலீஸை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மே 13ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு நாளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











