அடுத்து விஜய் நடிக்கும் படம்தான்.. சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ஷூட்டிங் ஓவர்.. படக்குழு ஹேப்பி!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா, யோகிபாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, ராஜேந்திரன் உட்பட பலர் நடித்த படம், கோலமாவு கோகிலா.
இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசை அமைத்திருந்தார்.

போதைப் பொருள்
2018- ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஹீரோயின் நயன்தாராவின் நடிப்பு பேசப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்படும் தனது தாயின் சிகிச்சைக்காக போதைப் பொருள் கடத்தலில் நயன்தாரா ஈடுபடுவது போன்ற கதையை கொண்ட படம் இது. யோகிபாபுவும் சிறப்பாக நடித்திருந்தார்.

பிரியங்கா மோகன்
இந்தப் படத்தின் 'கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி' என்ற பாடல் ஹிட்டானது. படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படம், 'டாக்டர்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக, பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

ஆக்ஷன் காமெடி
இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட, 'செல்லம்மா' பாடல் டிரெண்டானது.

ஷூட்டிங் நிறைவு
இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனாவுக்கு முன் கோவாவில் நடந்து வந்தது. கொரோனாவுக்கு பின் சென்னையில் தொடர்ந்து நடந்து வந்தது. இப்போது இதன் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விஜய் நடிக்கும் படம்
இந்தப் படத்தை அடுத்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்பது தெரியவில்லை. விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வரும் 13 ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











