நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டாக்டர்’… எப்போ தெரியுமா ?
சென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் சன் டிவியில் நவம்பர் 4ந் தேதி தீபாவளி பாண்டிகை அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தை 'கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் 'பீஸ்ட்' படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.
டாக்டர் படம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, தமிழக சட்டமன்றத் தேர்தலால் அம்முடிவு மாற்றப்பட்டு ரம்ஜான் பண்டிகை அன்று மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றும் வெளியாகவில்லை.
இப்படி தேதிகள் தள்ளிக்கொண்டே சென்ற நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தியேட்டர்கள் திறக்கப்படாத நிலை உள்ளதால், படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது.
டாக்டர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் நேரடியாக ஓடிடியில் ரீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. ஒடிடி உரிமையோடு சேடிலைட் உரிமையையும் சேர்த்து தான் டிஸ்னி ஹாட் ஸ்டார் டீல் பேசிஇருந்தது. ஆனால், டாக்டர் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே படத்தை சன் டிவிக்கு விற்றுவிட்டது. சன் தரப்பிடம் கேட்டபோது படத்தை திருப்பித்தர மறுத்து விட்டது. இதனால் படம் வெளியாவது தாமதமானது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் சன் டிவியில் நவம்பர் 4ந் தேதி தீபாவளி அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், நேரடி டிஜிட்டல் பிரீமியர் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











