சிவகார்த்திகேயனின் டாக்டர்...நான்கு மொழிகளில் ரிலீஸ்
சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது சிவகார்த்திகேயனின் டாக்டர். பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீசை படக்குழு தள்ளிப் போட்டு வருகிறது. ஆனால் படத்தின் ப்ரோமோ வீடியோ, பாடல்கள் ஆகியன படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட, விஜய் ரசிகர்கள் தான் அதிக ஆர்வமாக உள்ளனர். காரணம், டாக்டரை தொடர்ந்து பீஸ்ட் படத்தையும் நெல்சல் தான் இயக்கி வருகிறார்.

தள்ளி போன ரிலீஸ்
மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம், தமிழக தேர்தல் காரணமாக கோடை விடுமுறையில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் கொரோனா இரண்டாம் அலை, தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டிருந்தது.

4 மொழிகளில் ரெடி
தற்போது லேட்டஸ்ட் தகவலாக டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 4 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ரிலீஸ் தள்ளிப் போனதால், இந்த லாக்டவுனை பயன்படுத்தி, டாக்டர் படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் படக்குழு டப் செய்து விட்டதாம்.
Recommended Video

ஓடிடி.,யில் ரிலீசா
டாக்டர் படம் தான் ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீசாக போகும் சிவகார்த்திகேயனின் முதல் படம். இந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என சொல்லப்பட்டாலும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சர்ப்ரைஸ் அறிவிப்பு வருமா
ஆனால் டாக்டர் படத்தை பெரிய திரையில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புவதால் இது பற்றி படக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் ரிலீஸ் பற்றி சர்ப்ரைஸ் அறிவிப்பு ஏதாவது வெளிவர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











