சிவகார்த்திகேயனின் டாக்டர் ஓடிடி.,யில் நேரடி ரிலீஸ்...விரைவில் அறிவிப்பு
சென்னை : நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். மார்ச் 26 ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ், தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக மே 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரம்ஜானை முன்னிட்டு மே 13 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா, இரவு நேர லாக்டவுன் போன்ற காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் கேள்விகுறியாகி இருந்தது.

நேரடி ஓடிடி ரிலீஸ்
தற்போது தியேட்டரில் இல்லாமல் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜெஆர் ஸ்டூடியோஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாக்டவுன் எப்போது முடியும் என தெரியாததாலும், அதிகரிக்கும் கொரோனாவால் தியேட்டருக்கு வர மக்கள் தயக்கம் காட்டி வருவதாலும் படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏமாற்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்
ஆனால் 8 மாத லாக்டவுனிற்கு பிறகு திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு மாஸ்டர், சுல்தான், கர்ணன் போன்ற பெரிய நடிகர்களின் பட வசூல்கள் தான் நம்பிக்கை தந்துள்ளன. அடுத்து வர போகும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் கைகொடுக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர்.
Recommended Video

கோரிக்கை வைக்கும் தியேட்டர்கள்
இந்த சமயத்தில் டாக்டர் படக்குழுவின் இந்த அறிவிப்பு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் ஓடிடி.,யில் வெளியிடும் முடிவை மறு பரிசீலனை செய்யும்படி தியேட்டர் உரிமையாளர்கள் டாக்டர் படக்குழுவிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











