வலிமை வசூலை முந்திய சிவகார்த்திகேயனின் டான்.. மீண்டுமொரு 100 கோடி வசூல் கன்ஃபார்ம்!

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அஜித்தின் வலிமை வசூலை அடித்து நொறுக்கி உள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இதுவரை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் என்றால் அது டான் மட்டும் தான் என விநியோகஸ்தரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டான் திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகி உள்ள நிலையில் படத்தின் வசூல் உலகளவில் 100 கோடியை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

100 கோடியை நோக்கி

100 கோடியை நோக்கி

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி டான் படத்தில் வைத்த இன்னொரு காட்சியும் நடக்கப் போகிறது. முதல் படமே 100 கோடி வசூல் என ஒரு காட்சியை வைத்திருப்பார். இந்நிலையில், 11 நாட்களில் டான் திரைப்படம் உலகளவில் 96 கோடி வசூலை அள்ளி இருப்பதாக அட்டகாசமான தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் டான் எந்தவித தடையுமின்றி ஓடி வருவதால், 100 கோடி இன்னும் சில தினங்களில் சாத்தியம் என்கின்றனர்.

டாக்டரை தொடர்ந்து

டாக்டரை தொடர்ந்து

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக மாறியது. இந்நிலையில், டான் திரைப்படமும் அந்த 100 கோடி கிளப்பில் இணையும் என்பது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.

ஓவர்சீஸ் மார்க்கெட்

ஓவர்சீஸ் மார்க்கெட்

ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் படங்கள் தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தி வந்தன. இந்நிலையில், அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் தற்போது இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் படம் சக்கைப் போடு போட்டு வருகிறது.

வலிமையை முந்திய டான்

வலிமையை முந்திய டான்

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூலை ஓவர்டேக் செய்து விட்டது. யூகேவில் பீஸ்ட் 5.6 லட்சம் பவுண்டுகளுடன் முதலிடத்திலும், டான் திரைப்படம் 1.40 லட்சம் பவுண்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வலிமை திரைப்படம் 1.39 பவுண்டுகளுடன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் வெறும் 63 ஆயிரம் பவுண்டுகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

100 கோடி பட்ஜெட்டில்

100 கோடி பட்ஜெட்டில்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் 50 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும், அதற்கு அடுத்த படம் 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு கூடிய சீக்கிரமே வரும் என்றும் இயக்குநர் அட்லி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் ரசிகர்கள் அப்செட்

நடிகர் விஜய்க்கு அடுத்ததாக ஓவர்சீஸ் மார்க்கெட்டை நடிகர் சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்கிற செய்தி அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. நீண்ட வருடங்கள் காத்திருப்புக்கு பின்னர் வெளியான அஜித்தின் வலிமை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சாதனை படைக்க முடியாமல் சறுக்கி உள்ளது. மீண்டும் அஜித் படத்தை வினோத் இயக்கி வரும் நிலையில் அந்த படமாவது மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X