பூஜையுடன் தொடங்கிய டான் பட பணிகள்... வைரலாகும் போட்டோஸ்.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தின் பணிகள் பூஜையுடன இன்று தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

டான் படத்தில் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கவுதம் மேனன் நடிக்கிறார்
சிவகார்த்திகேயனும் அப்பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அந்த போட்டோக்கள் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டது. டான் படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

டப்பிங் பணிகள் தொடக்கம்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

ஹேஷ்டேக் ட்ரெண்டிங்
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். மேலும் அவர் டப்பிங் பேசும்போது எடுத்த புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து #sivakarthikeyan என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
டான் படத்தின் பணிகள் விரைவில் நிறைவடைந்து விடும் என்றும் அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











