அட செம...டானுக்கு கிடைத்த அசத்தல் அங்கீகாரம்...வலிமைக்கு கூட கிடைக்கலியே
சென்னை : அஜித்தின் வலிமை படத்திற்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Recommended Video
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பாலா சரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நாளை டான் ரிலீஸ்
அதிகம் எதிர்பார்க்கப்படும் டான் படம் மே 13 ம் தேதியான நாளை ரிலீஸ் செய்யப்பட முதல் டான் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது பள்ளி சிறுவன் ரோலிலும், காலேஜ் ஸ்டூடன்ட் ரோலிலும் நடித்துள்ளார். இது வித்தியாசமான ஜாலியான படம் என சொல்லப்படுவதால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டான் ரன்னிங் டைம்
டான் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 21 நிமிடமும், செகண்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 22 நிமிடமும் கொண்டதாக உள்ளதாம். டான் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் தளமும் வாங்கி உள்ளன. தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

வலிமைக்கு கூட கிடைக்கலியே
இதில் மற்றொரு அப்டேட்டாக டான் படத்தின் சென்சார் போர்டு " U" சான்றிதழ் வழங்கி உள்ளது. 2022 ல் அதிக வசூலை பெற்ற தமிழ் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அஜித்தின் வலிமை படத்திற்கே யுஏ சான்றிதழ் தான் சென்சார் போர்டு வழங்கியது. அதில் போதைப் பொருள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால் யு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்து விட்டது. வலிமை படத்திற்கு கிடைக்காத யு சான்றிதழ் சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு கிடைத்துள்ளது.

ஓப்பனிங் வசூலை மிஞ்சுமா
டான் படத்தின் முதல் நாள் வசூல், முந்தைய சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை படங்களின் முதல் நாள் வசூலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமராஜா படம் ஓப்பனிங் நாளில் 13.5 கோடிகளை வசூல் செய்தது. அதே சமயம் நம்ம வீட்டு பிள்ளை படம் முதல் நாளில் 6 முதல் 6.5 கோடிகளை வசூல் செய்தது.


Click it and Unblock the Notifications











