சிவகார்த்திகேயனின் டான் படத்தில் யார் ஹீரோயின் தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, Lyca நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.

வில்லனாக இருக்குமோ?
இயக்குனர் S. J.சூர்யா சமீப காலமாக படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதிலும் வில்லனாக இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

மீண்டும் இணைந்தனர்
இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி டான் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். அதை தொடர்ந்து டான் படத்தில் இணைந்துள்ளார்.

வெற்றி கூட்டணி
நகைச்சுவை நடிகர் சூரி டான் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை என சிவா - சூரி காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து இந்த படத்திலும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மீண்டும் ஜோடி
நாயகி பிரியங்கா மோகன் டான் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவா - பிரியங்கா கூட்டணியில் டாக்டர் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு காத்துள்ளது. அதைத்தொடர்ந்து டான் படத்தில் இரண்டாம் முறையாக ஜோடி போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











