சிவகார்த்திகேயனின் “டான்“ காப்பியா?... போஸ்டரை பார்த்து குழப்பமான ரசிகர்கள் !

சென்னை : சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாக உள்ள டான் திரைப்படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இப்படம் காப்பியா? என கேட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

டான்

டான்

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் டான். அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.

பாடல்கள் ஹிட்

பாடல்கள் ஹிட்

டான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை ஜலபுல ஜங்கு மற்றும் பே ஆகிய 2 பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே ஹிட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.

மே 13ந் தேதி ரலீஸ்

மே 13ந் தேதி ரலீஸ்

டான் படத்தின் படப்பிடிப்பு ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை முதலில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். அன்றைய தினம் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டது. இதையடுத்து இப்படம் வருகிற மே 13-ந் தேதி வெளியாக உள்ளது.

டான் காப்பியா?

டான் காப்பியா?

இந்நிலையில், டான் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் காப்பியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நண்பன் படத்தில் சத்யாராஜ் கேரக்டர் போல ஷூட் கோட்டுடன் மாணவர்களை திட்டிக்கொண்டு இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா, அது மட்டும் இல்லாமல், அவரின் பின்னால் சிவகார்த்திகேயன்,பால சரவணன், ஷிவாங்கி கிண்டல் செய்கிறார்கள் இதைப்பார்த்துதான் டான் திரைப்படம் காப்பியா? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X