இதோ வந்துட்டாருல... சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
சென்னை : சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.
டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

டாக்டர்
சிவகார்திகேயனின் டாக்டர் படம் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இப்படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துதரப்பையும் மகிழ்வித்து வசூலை வாரிக்குவித்தது. கொரோனா பரவலையும் மறந்து குடும்பம் குடும்பமாக திரையரங்கில் டாக்டர் படத்தை காண மக்கள் குவித்தனர். இந்த படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டுக்கு ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது.

டான்
டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் டான். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்த நிலையில், டான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
காலேஜ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள டான் படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி மணவராக நடித்துள்ளார். இப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டான் திரைப்படம் மார்ச் 27ந் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அயலான்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிக்கப்பட்டு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











