டான் ஓபனிங் சாங்.. தியேட்டர் தெறிக்கப் போகுது ... இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கல்லூரி கதைக்களத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்திலும் ஜோடியாக நடிக்க சூரி, எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், காளி வெங்கட் ,ஆர் ஜே விஜய் என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

கோயமுத்தூரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டான் ஓபனிங் சாங் குறித்த மாஸான அப்டேட்டை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார்.

அனைத்து வயதினரும்

அனைத்து வயதினரும்

சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரும் பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் தான் நடிக்கும் ஒவ்வொரு கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

டாக்டர் நேரடியாக ஓடிடிக்கு

டாக்டர் நேரடியாக ஓடிடிக்கு

நம்ம வீட்டுப் பிள்ளை பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மருத்துவராக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. பின் கொரோனா சூழல் காரணமாக இப்போது நேரடியாக ஓடிடிக்கு தயாராகி வருகிறது.

ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து

ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து

ஓடிடியில் டாக்டர் ரிலீஸ் ஆக அனைத்து கட்ட பணிகளும் முடிவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் 50 சதவீத இருக்கைகள் உடன் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படக்குழு இப்பொழுது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட தயாராகிக் கொண்டுள்ளது . தீவிர ஆலோசனையில் இருக்கும் படக்குழு மிக விரைவிலேயே நல்ல செய்தியை வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன்

கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப் படம் வெளியாவதால் ரசிகர்களும் டாக்டர் படத்தை திரையரங்குகளில் தான் காண வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். தெலுங்கில் கேங் லீடர் படத்தில் செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை பிரியங்கா அருள் மோகன் டான் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் விஜே அர்ச்சனா மற்றும் தீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அட்லியின் உதவியாளர்

அட்லியின் உதவியாளர்

சிவாகார்த்திகேயன் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் அவரோ பிளைட்டை பிடித்து பாலிவுட்டுக்கு பறந்து சென்று ஷாருக்கானை இயக்கி வருகிறார்.எனவே இப்பொழுது அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்து வருகிறார் .

டான்

டான்

கல்லூரி கதைக்களத்தை மையமாகக் கொண்டு இளமை துள்ளலுடன் உருவாகி வரும் இப்படத்திற்கு "டான்" என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி

கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே தொடங்கப்பட்ட படப்பிடிப்பு இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதால் நிறுத்தி வைக்கப்பட்டு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் சூரி, சிவாங்கி,எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி,காளி வெங்கட், முனீஸ்காந்த், விஜே விஜய் என பலர் இந்த படத்தில் நடிக்க அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

டான் படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். சிவகார்த்திகேயன்,அனிருத் கூட்டணி இணைந்தாலே நிச்சயம் அந்த படம் வேற லெவல் ஹிட்டடிக்கும் என்ற ட்ரேட் மார்க் ஏற்கனவே எழுதப்பட்டிருக்க டான் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் டான் படத்தை குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார்.

ஓபனிங் பாடல் விஷுவல்ஸை

ஓபனிங் பாடல் விஷுவல்ஸை

இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்து டான் படத்தின் ஓபனிங் பாடல் விஷுவல்ஸை சிபி சக்கரவர்த்தி அனிருத்திற்கு காண்பித்துள்ளார். அதை பார்த்த அனிருத் ஆஹா ஓஹோ என புகழ்ந்துள்ளார்.

தியேட்டர் தெறிக்கப் போகுதுs

தியேட்டர் தெறிக்கப் போகுதுs

மேலும் இது பற்றிய ட்விட்டர் பக்கத்தில் சிபி சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளதாவது " இந்த நாள் என்றென்றும் நினைவில் இருக்கும் ... டான் ஓப்பனிங் பாடலுக்கான விஷுவல் காட்சிகளைப் பார்த்துவிட்டு நேர்மறையான வார்த்தைகளைக் கூறியதற்கு நன்றி.. அட்டகாசமான பாடல் அளித்த அனிருத் சாருக்கு பெரிய பெரிய நன்றி.. தியேட்டரில் இந்த பாடலை பார்க்கும் போது தெறிக்கப் போகுது.. லவ் யூ சார்" என அனிருத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தையும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த மாஸான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மாஸான அப்டேட்

மாஸான அப்டேட்

டான் அப்டேட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டவாறு செம தெம்பாக இருக்க விரைவில் பாடல்கள் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X