சிவகார்த்திகேயனின் டான் அந்த படங்களின் காப்பியா? மேடையில் இப்படி சொல்லிட்டாரே எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் தான் சிபி சக்கர்வர்த்தி. அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள டான் வரும் மே 13ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. டிரைலர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் படம் நிச்சயம் ஹிட் அடித்து விடும் என்று ரொம்பவே நம்பிக்கையுடன் பேசினார்.

எஸ்.ஜே. சூர்யா பேசும் போது அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை அந்த இயக்குநருடன் ஒப்பிட்டுப் பேசியது தான் தற்போது இப்படியொரு பூகம்பம் கிளம்ப காரணமாகி உள்ளது.

டான் படத்தின் கதை

டான் படத்தின் கதை

டான் படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது கல்லூரியில் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவன் வாழ்வில் சாதித்து என்ன ஆகிறான் என்பது தான் படத்தின் கதை என்று. பள்ளிப் பருவம், கல்லூரி மாணவன் மற்றும் கல்லூரிக்குப் பிறகு என்ன ஆகிறார் சிவகார்த்திகேயன் என்பதை டிரைலரில் காட்டியிருந்தனர். ஏற்கனவே சொன்னது போல டைரக்டராகத் தான் சிவகார்த்திகேயன் ஆகப் போகிறார் என்பதை டிரைலர் மீண்டும் கன்ஃபார்ம் பண்ணும் விதமாகவே உருவாகி இருந்தது.

நண்பன் படத்தின் காப்பியா

நண்பன் படத்தின் காப்பியா

நண்பன் உள்ளிட்ட சில படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குநராக அட்லி பணியாற்றி இருந்தார். மெர்சல் படத்தில் அட்லிக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். கல்லூரி படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் அப்படியே நண்பன் சத்தியாராஜை நியாபகப்படுத்துகிறது.

நண்பன் பிளஸ் வசூல் ராஜா

நண்பன் பிளஸ் வசூல் ராஜா

நண்பன் பிளஸ் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படங்களின் மிக்ஸிங் தான் டான் படத்தின் கதை என தற்போது பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. நண்பன் மற்றும் வசூல் ராஜா என இரு படங்களும் பாலிவுட் படங்களான 3 இடியட்ஸ் மற்றும் முன்னாபாய் எம்பிபிஎஸ் படங்களின் ரீமேக் தான்.

எஸ்ஜே சூர்யா ரிவீல்

எஸ்ஜே சூர்யா ரிவீல்

டான் படத்தை பாராட்டி பேசிய எஸ்.ஜே. சூர்யா இதுதான் ரியல் சம்மர் ட்ரீட் என மூச்சுக்கு மூவாயிரம் தடவை கூறினார். மேலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை பார்த்து தமிழ்நாட்டின் 'ராஜ்குமார் ஹிரானி' என 3 இடியட்ஸ் மற்றும் முன்னாபாய் எம்பிபிஎஸ் படங்களை இயக்கி இயக்குநரின் பெயரை குறிப்பிட்டே பாராட்டி உள்ள நிலையில், டான் படத்தின் கதை இந்த இரண்டு படங்களின் மிக்ஸிங்கா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

விடிவியையும் விடல

விடிவியையும் விடல

கல்லூரி வகுப்பறைக்குள் அமர்ந்து கொண்டு எந்திரன் படம் பார்க்கும் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் சரியாக படிக்காமல் உருப்படவில்லை என பலரும் திட்டும் நிலையில், கடைசியாக விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக் போல இயக்குநராக மாறுவது தான் படத்தின் கதையா? என்றும் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் தான் படத்தின் கதை எனக் கூறி எஸ்கேப் ஆனாலும், ஏற்கனவே வந்த பல பெரிய படங்களின் சாயல் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் குருநாதரை ஓவர்டேக் செய்து விடுவார் போல என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X