தொடர்ந்து வசூல்மழையில் சிவகார்த்திகேயனின் டான் படம்... முதல் 3 நாள்ல எவ்ளோ கலெக்ஷன் பாருங்க!

சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரகனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் வெளியானது டான் படம். அவரது முந்தைய படமான டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படம் வெளியாகிய நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது டான் படம். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சிறப்பான வசூலை அவருக்கு கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் அவரது தயாரிப்பில் வெளியாகியுள்ள டான் படமும் அவருக்கு நல்ல வசூலை கொடுத்து வருகிறது.

சிறப்பான கெமிஸ்ட்ரி

சிறப்பான கெமிஸ்ட்ரி

டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இந்தப் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். இந்த ஜோடி சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில், அப்பா -மகன் சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு போன்றவற்றை கதைக்களமாக படத்தில் பயன்படுத்தியுள்ளார் அவர்.

கண்ணீரை வரவழைத்த சமுத்திரக்கனி

கண்ணீரை வரவழைத்த சமுத்திரக்கனி

குறிப்பாக அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி மற்றும் பேராசிரியராக நடித்துள்ள எஸ்ஜே சூர்யா இருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளனர். இருவருக்கும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகவும் அருமையாக பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக அப்பாவாக வரும் சமுத்திரக்கனி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளார்.

பிரபலங்கள் கண்ணீர் பதிவு

பிரபலங்கள் கண்ணீர் பதிவு

பிரபலங்கள் பலரும் இந்தக் கேரக்டர் குறித்தும் அவர் எப்படி தங்களது அப்பாக்களை நினைவுப்படுத்தி தங்களை கண்கலங்க வைத்தார் என்பது குறித்தும் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர். தங்களது மகன்களை ஹீரோவாக்க எப்போதும் அப்பாக்கள் வில்லன்களாகவே இருக்கின்றனர் என்ற டயலாக் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அரங்கு கொள்ளாத காட்சிகள்

அரங்கு கொள்ளாத காட்சிகள்

இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனாக 50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

SivaKarthikeyan என்ன சொன்னார் ? யார் மீதும் கோபம் இல்லை |Sivakarthikeyan|Filmibeat Tamil
3 நாட்களில் சிறப்பான கலெக்ஷன்

3 நாட்களில் சிறப்பான கலெக்ஷன்

தமிழகத்தில் இந்தப் படம் கடந்த 3 நாட்களில் மிகவும் சிறப்பான கலெக்ஷனை ஈட்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் 33 கோடியை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் 2.82 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. வாரயிறுதியில் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த நிலையில், வார நாட்களிலும் படத்தின் புக்கிங் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X