Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் டாலர்களை குவித்த டான் படம்... மிரட்டலான வசூலா இருக்கே!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது டான் படம். இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக காணப்பட்டது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலிலும் சிறப்பான கலெக்ஷனை குவித்து வருகிறது.
கடந்த 5 நாட்களில் மட்டுமே படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. மேலும் வார நாட்களிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏதாவது
பார்த்து
பண்ணுங்க...ஷங்கரிடம்
நெட்டிசன்கள்
என்ன
கேட்டிருக்காங்க
தெரியுமா
?

சிவகார்த்திகேயனின் டான் படம்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரிய அளவில் வரவேற்பை தந்து வருகின்றனர்.

ரூ.100 கோடியை வசூலித்த டாக்டர் படம்
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்நிலையில் அவரது அடுத்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாத்துடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ரிலீசுக்கு தயாரான எஸ்கே20
அடுத்ததாக அவரது எஸ்கே20 படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 12ல் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பா சென்டிமெண்ட் மற்றும் ஆசிரியர் -மாணவர் உறவை சிறப்பாக காட்டியுள்ள டான் படத்தை ரசிகர்கள் கொண்டி வருகின்றனர்.

கல்லூரி, பள்ளி மாணவர்
சிவகார்த்திகேயன் கல்லூரி மற்றும் பள்ளி மாணவராக இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த கேரக்டருக்காக தான் எந்த வகையிலும் மெனக்கெடவில்லை என்று அவர் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப அவர் கல்லூரி மாணவர் கேரக்டரில் சிறப்பாக பொருந்தியுள்ளார்.

4 நாட்களில் சிறப்பான வசூல்
இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் கடந்த 4 நாட்களில் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கும் மேல் டான் படம் வசூலித்துள்ளது. உலகளவில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் டான் படம் வசூலித்துள்ளது.

அமெரிக்காவில் 3 லட்சம் டாலர்கள் வசூல்
இந்த 4 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 3 லட்சம் அமெரிக்க டாலர்களை படம் வசூலித்துள்ளதாம். இந்திய மதிப்பில் இது 2.32 கோடி ரூபாய். அமெரிக்காவில் இந்தப் படம் 225 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் படத்தினை ரிலீஸ் செய்துள்ள பிரைம் மீடியா நிறுவனம் இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.