சிவகார்த்திகேயன் ஸ்டூடண்டாக நடிக்கும் டான் படம்... நாளை ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது டாக்டர்.
இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து அடுத்ததாக டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்த நிலையில் நாளைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்கள் சிறப்பாக கைகொடுத்தன. சில படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதத்தில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் அதிரடி வெற்றியை பெற்றுள்ளது.

டாக்டர் படம்
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் ரிலீசான இந்தப படம் காமெடி, சென்டிமெண்ட் என பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தில் டாக்டராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். வழக்கமாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் படத்தில் நடித்திருந்தார்,

டான் படம்
இந்தப் படம் அவரை 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைத்துள்ளது. இந்தப் படம் கொடுத்துள்ள வெற்றியை அடுத்து அவர் மிகவும் உற்சாகமாக அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ள டான் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

டப்பிங் நிறைவு
மேலும் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். அடாது மழையிலும் விடாமல் டப்பிங் பணிகளை முடித்து உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

நாளை பர்ஸ்ட் லுக்
லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளைய தினம் 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை படம்
படத்தில் பிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பிறகு சிவாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி போன்ற நடிகர்களும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
இந்தப் படத்தின் டப்பிங் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், இந்தப் படம் தனது கல்லூரி நாட்களை நினைவூட்டியதாக தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வெகுவாக வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு அவர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











