விஜய், அஜித்தை தொடரும் சிவகார்த்திகேயன்... சிறப்பான வளர்ச்சியில் டான்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

டாக்டர் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், சமீபத்தில் வெளியான டான் படமும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே வசூலில் 50 கோடி ரூபாயை டான் படம் கடந்துள்ளது. தொடர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான கதைத் தேர்வுகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் ரிலீசாகி இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. டாக்டர் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது டான் படம் அதை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகிறது.

அமைதியான நடிப்பு

அமைதியான நடிப்பு

டாக்டர் படத்தில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வழங்கியிருந்தார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இந்தப் படம் சூப்பர் வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

டான் படம்

டான் படம்

இதையடுத்து அவர் கல்லூரி மாணவராக நடித்து கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டான் படம். பிரியங்கா மோகன் டாக்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாகியுள்ளார். அறிமுக இயக்குர் சிபி சக்ரவர்த்தி காமெடி, சென்டிமெண்ட் என்று அளவான கலவையுடன் படத்தை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

அப்பா சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு, காதல், காமெடி என இந்தப் படம் ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து வெளியாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வார இறுதி நாட்களில் மட்டுமில்லாமல் வார நாட்களிலும் திரையரங்குகளில் ரசிகர்களின் அதிகமான கூட்டத்தை பார்க்க முடிந்தது.

அமெரிக்காவில் சிறப்பான வசூல்

அமெரிக்காவில் சிறப்பான வசூல்

அமெரிக்காவிலும் இந்தப் படம் ரிலீசான நிலையில், அங்கு முதல் 7 நாட்களிலேயே 3.5 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படங்கள் முறையே 1.38 மில்லியன் டாலர் மற்றும் 4.1 லட்சம் டாலர்களை வசூலித்துள்ள நிலையில் 3வது படமாக வசூல் சாதனை செய்துள்ளது டான்.

விஜய், அஜித் படங்களை தொடரும் டான்

விஜய், அஜித் படங்களை தொடரும் டான்

அமெரிக்காவில் பல திரையரங்குகளில் இந்தப் படங்கள் ரிலீசான நிலையில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பீஸ்ட் முதலிடத்திலும், வலிமை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் படங்களின் ஒட்டுமொத்த கலெக்ஷன் இது. இதனிடையே கடந்த 7 நாட்களிலேயே டான் படம் இந்தப் படங்களின் வசூலை நெருங்கியுள்ளது.

அதிகரிக்கும் மாஸ்

அதிகரிக்கும் மாஸ்

தொடர்ந்து வாரயிறுதி நாட்களில் அதிகமான வசூல் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், அஜித் படங்களை நெருங்கும் வகையில் அமெரிக்காவிலேயே சிவகார்த்திகேயன் படத்தின் வசூல் அதிகமாக காணப்படுவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அவருடைய மாஸ் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதையே இது காட்டுகிறது.

ரூ. 60 கோடி வசூல்

ரூ. 60 கோடி வசூல்

இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கடந்த ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இன்றும் நாளையும் வாரயிறுதி நாட்களாக வருவதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X