கைமாறிய டான் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள்... மிகப்பெரிய தொகைக்கு விற்பனை?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், மாளவிகா மோகனன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் டான்.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்தப் படம் மார்ச் இறுதியில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், மாளவிகா மோகனன் டாக்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக டான் படத்தில் இணைந்துள்ளனர். டாக்டர் படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி பேசப்பட்டது. படமும் சிறப்பான வெற்றியை தந்துள்ளது. இதனிடையே டான் படத்திலும் இவர்கள் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். சில காட்சிகளில் பள்ளி மாணவராகவும் இவர் தோன்றவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் இறுதியில் ரிலீஸ்

மார்ச் இறுதியில் ரிலீஸ்

படம் மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கொடுத்துள்ள அதிரி புதிரி வெற்றி இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

மேலும் சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடியும் படத்தில் உள்ளது. டாக்டர் படத்தில் மற்றவர்களை காமெடி செய்ய வைத்து வேடிக்கை பார்த்தார் சிவகார்த்திகேயன். டான் படத்தில் மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளார். அவருக்கு எப்போதுமே இந்த பார்முலா கைகொடுக்கும் பட்சத்தில் டான் படமும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கைமாறிய உரிமைகள்

கைமாறிய உரிமைகள்

இந்நிலையில் படத்தின் திரையரங்க ரிலீசுக்கு அடுத்த ஓடிடி ரிலீஸ் ரைட்சை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியதாகவும் கூறப்படுகிறத. இந்த இரண்டு உரிமைகளுக்காக மிகப்பெரிய தொகை கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X