டான் படத்தோட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு... விடுமுறையை கொண்டாட்டமாக்க வர்ராரு டான்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு பின் தற்போது அவர் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை லைகா புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான டாக்டர் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. வழக்கமான அலப்பறைகள் இல்லாமல் அமைதியான நடிப்பை இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் சிவாவிற்கு பெற்றுத் தந்தது. மனிதக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் திலீப் குமார். தற்போது அவர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

டான் படம்

டான் படம்

டாக்டர் படத்திற்கு பிறகு தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். படத்தில் அவர் கல்லூரி மாணவனாக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சிபி சக்ரவர்த்தி இயக்கம்

சிபி சக்ரவர்த்தி இயக்கம்

படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் இசையமைத்துள்ளார் அனிருத். டாக்டர் படத்தில் சிவாவுடன் இணைந்திருந்த பிரியங்கா அருள் மோகனே நாயகியாகியுள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

படத்தில் கௌதம் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளளதாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். சூப்பரான பிரமோவுடன் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படமும் இந்த ஆண்டின் மத்தியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் சிஜி வேலைகள் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X