பக்காவாக ரிலீசுக்கு தயாரான டான்... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் பத்தி பாக்கலாமா!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, பால சரவணன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் ரிலீசுக்காக தற்போது காத்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை ரிலீசாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் உள்ளார். இதையடுத்து தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன.

அயலான் படம்

அயலான் படம்

இதில் மிகவும் முக்கியமான படமாக அயலான் காணப்படுகிறது. இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது. ஆனால் சிஜி வேலைகள் உள்ளிட்டவை இந்தப் படத்தில் இன்னும் முடிக்கப்படவில்லை. அதனால் படத்தின் ரிலீஸ் தாமதமாவதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்

அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்

டாக்டர் படத்தின் வெற்றிக் கொடுத்த சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் உள்ள நிலையில், குறைவான காலகட்டத்தில் அவரது அடுத்தப் படம் டான் தற்போது ரிலீசாவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் டாக்டர் படத்தில் தேர்ந்தெடுத்த நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன் டான் படத்தில் மீண்டும் அலப்பறையை கையில் எடுத்துள்ளார்.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். மேலும் பள்ளி மாணவராகவும் அவர் சில காட்சிகளில் தோன்றவுள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக பே மற்றும் ஜலபுல ஜங்கு போன்ற பாடல்கள் மிகுதியான வரவேற்பை பெற்றுள்ளன. இவை லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளன.

பாடல் வீடியோ ப்ரமோ பகிர்வு

இந்நிலையில் நாளைய தினம் படம் ரிலீசாவதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ஜலபுல ஜங்கு பாடலின் பிரமோவை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த பிரமோ மிகவும் கலர்புல்லாக காணப்படுகிறது.

Recommended Video

இந்த படத்துக்கு DON-னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா Sivakarthikeyan Super Speech at Don press Meet
மாஸ் படமல்ல

மாஸ் படமல்ல

இந்தப் படத்தை மிகவும் மாஸாக எதிர்பார்த்து வராதீர்கள் என்று முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண கல்லூரி மாணவனின் வாழ்க்கை சம்பவங்களை இந்தப் படம் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேராசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலான சம்பவங்களையும் இந்தப் படம் பேசுவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X